இ.பி.எப்., குறைதீர் கூட்டம்கோபி அருகே இன்று ஏற்பாடு
இ.பி.எப்., குறைதீர் கூட்டம்கோபி அருகே இன்று ஏற்பாடுஈரோடு:ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (இ.பி.எப்.,) மண்டல ஆணையர் வீரேஷ், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், மாவட்ட அளவிலான வருங்கால வைப்பு நிதி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி, கோபி அருகே தாசம்பாளையத்தில் உள்ள, அருண் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன கூட்ட அரங்கில் குறைதீர் கூட்டம் இன்று (27) காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனத்தினர் பங்கேற்கலாம். வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு குறித்த குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், முந்தைய கூட்டங்களில் மனு வழங்கி நிலுவையில் உள்ளவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.