சென்டர் மீடியனில் இடைவெளி கேட்டு மறியல்
காங்கேயம்: காங்கேயம் அருகே, கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலை அக-லப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரோட்டின் மத்தியில் சென்டர் மீடியன் வைக்கப்படுகிறது. காங்கேயத்தை அடுத்த காடையூரில், தனியார் பள்ளிக்கு செல்லும் வழி அருகில் சென்டர் மீடியனை இடைவெளி விட்டு அமைக்க, பெற்றோர் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தொடர்ந்து பணி மேற்-கொள்ளப்பட்டதால் நேற்று காலை பள்ளி மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள், ௩0க்கும் மேற்பட்டோர் சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.காங்கேயம் எஸ்.ஐ., கார்த்திக்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்து-றையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் மனு கொடுத்து தீர்வு காண அறிவுறுத்தவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.