உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூதாட்டி வீட்டில் திருட்டு

மூதாட்டி வீட்டில் திருட்டு

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அடுத்த குரும்பபாளையம், அய்யன் தோட்டத்தை சேர்ந்தவர் விஜயா, 65; கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மகளை பார்க்க வெளியூர் சென்று விட்டார். நேற்று வீடு திரும்பியபோது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 20 கிராம் வெள்ளி நாணயம், 4,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. மூதாட்டி விஜயா புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை