உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் கண்ணெதிரில்கார் மோதி தாய் பலி

மகன் கண்ணெதிரில்கார் மோதி தாய் பலி

நம்பியூர்,: நம்பியூர் அருகேயுள்ள நிச்சாம்பாளையம், அருள்மலை பிரிவை சேர்ந்தவர் சாந்தாமணி, 68; விவசாய கூலி தொழிலாளி. மகன் சரவணகுமாருடன் அதேபகுதியில் தோட்ட வேலைக்கு சென்று விட்டு, நேற்று காலை, ௭:௩௦ மணியளவில், கெட்டிச்செவியூர்-குன்னத்துார் சாலையை இருவரும் நடந்து கடந்தனர்.சரவணகுமார் சென்று விட அவரின் பின்னால் சென்ற சாந்தாமணி மீது, அதிவேகமாக வந்த இன்னோவா கார் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட மூதாட்டி, மகன் கண்ணெதிரில் இறந்தார். காரை ஓட்டி வந்த, கோபி அருகே வெள்ளாளபாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சபரீஷ், ௩௨, ஓட்டம் பிடித்து விட்டார். நம்பியூர் போலீசார் காரை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை