உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடப்பள்ளி வாய்க்காலில் தலைமதகு கட்டமைப்பில் விரிசல்

தடப்பள்ளி வாய்க்காலில் தலைமதகு கட்டமைப்பில் விரிசல்

தடப்பள்ளி வாய்க்காலில் தலைமதகு கட்டமைப்பில் விரிசல்கோபி : கோபி அருகே தடப்பள்ளி வாய்க்காலின் தலைமதகின், பிரதான மேடை கட்டமைப்பில் விரிசல் விழுந்துள்ளது.பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. இதற்காக, 1855ல் இரு பாசனங்களுக்கும், கொடிவேரி தடுப்பணையில் தலைமதகு கட்டப்பட்டது. கடந்த, 1919ல் திருகாணிக்கதவு அமைப்புடன் தலைமதகு வடிவமைத்து, தடப்பள்ளி வாய்க்காலுக்கு ஆறு ஷட்டரும், அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு ஐந்து ஷட்டர்களும் நிறுவப்பட்டன. திருகாணிக்கதவு கொண்ட ஷட்டரை, கையால் சுழற்றி இயக்கும் முறைக்கு மாறாக, மின்மோட்டார் மூலம் இயக்கும் திட்டப்பணி சில ஆண்டுகளாக நடக்கிறது. இந்நிலையில் தடப்பள்ளி வாய்க்காலின் தலைமதகை தாங்கி நிற்கும், கான்கிரீட் மேடை கட்டமைப்பு சமீபத்தில் விரிசல் விழுந்துள்ளது. தற்போது வாய்க்காலில் பாசனங்களுக்கு தண்ணீர் திறந்துள்ள சூழலில், அழுத்தம் காரணமாக மேலும் மேடையில் விரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீர்வள ஆதாரத்துறையினர் முன்னெச்சரிக்கையாக தலைமதகின் மேடை கட்டமைப்பை பலப்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை