உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேக்கரியில் தீ விபத்துவாடிக்கையாளர்கள் ஓட்டம்

பேக்கரியில் தீ விபத்துவாடிக்கையாளர்கள் ஓட்டம்

பேக்கரியில் தீ விபத்துவாடிக்கையாளர்கள் ஓட்டம் ஈரோடு:ஈரோட்டில் உள்ள பேக்கரியில், நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதால், வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஈரோடு, அண்ணாஜி வீதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்று மதியம், 1:25 மணியளவில் பானி பூரி தயார் செய்ய காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது, டியூபில் வெடிப்பு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதை பார்த்து, கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த கடைக்காரரான சுதாகர், 45, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். முன்னதாக, பேக்கரி ஊழியர்களே ரெகுலேட்டரை ஆப் செய்து, காஸ் வெளியேற்றத்தை நிறுத்தினர். இதனால் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், அங்கு சென்று ஆய்வு செய்து டியூபை மாற்றி கொள்ள அறிவுறுத்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி