லாரி மீது மோதிய வேன்தொழிலாளர்கள் காயம்
லாரி மீது மோதிய வேன்தொழிலாளர்கள் காயம்பெருந்துறை, :சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு, நேற்று அதிகாலை வந்தது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகில் வந்தபோது, சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் வேன் மோதியது. இதில் டிரைவர் நெல்சன் டேவிட், 18 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மற்றவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.