உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைக்கோவில் படிக்கட்டு வழியில்தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா?

மலைக்கோவில் படிக்கட்டு வழியில்தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா?

மலைக்கோவில் படிக்கட்டு வழியில்தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா?கோபி:பச்சைமலை முருகன் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டின் நடுவே, தடுப்பு கம்பிகள் அமைக்க பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோபி அருகே, பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், படிமண்டபத்துடன் கூடிய, 180 படிக்கட்டுகள் வழியாகவும் கோவிலை அடையலாம். தினமும் மட்டுமின்றி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட நாட்களில், படிக்கட்டு வழியாக ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். ஆனால் படிக்கட்டு பகுதியின் நடுவே, அடிவாரம் முதல், மலைக்கோவில் வரை, தடுப்பு கம்பிகள் ஏதும் பதிக்கப்படவில்லை. இதனால், வயதான பக்தர்கள், நடக்க முடியாதவர்கள், படிக்கட்டு வழியாக செல்ல சிரமப்படுகின்றனர்.எனவே, படிக்கட்டு நடுவே பிடித்து நடக்க வசதியாக, தடுப்பு கம்பிகள் அமைக்க, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை