மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
27-Jan-2025
கொங்கு பொறியியல் கல்லுாரிபேராசிரியைக்கு தேசிய விருதுஈரோடு, :ஐ.எஸ்.டி.இ.,யின், 54வது தேசிய மாநாடு, பஞ்சாப் மாநிலம் லாமிரின் டெக்ஸ் கில்ஸ் பல்கலை கழகத்தில் நடந்தது. மாநில ஆளுநர் குலாப்சந்த் கடாரியா தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஏ.ஐ.சி.டி.இ., செயலாளர் சீதாராம், நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே.பால், என்.எஸ்.டி.சி., தலைமை நிர்வாக அதிகாரி வேத்மணி திவாரி பங்கேற்றனர். எம்.ஐ.ஈ.டி., மொகபூப் முகமது யூனுஸ் நினைவு தேசிய சிறந்த பெண் பேராசிரியர் விருதுக்காக பெறப்பட்ட, 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் விஜய சித்ரா தேர்வு செய்யப்பட்டார். ஆளுநர் விருதை வழங்கினார். விருது பெற்ற பேராசிரியையை, கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி மற்றும் துறை தலைவர் சுஜி பிரசாத் பாராட்டி வாழ்த்தினர்.
27-Jan-2025