மேலும் செய்திகள்
தலைமறைவான வாலிபர் கைது
11-Feb-2025
கொலை வழக்கில் தலைமறைவு ஆசாமி கைதுதாராபுரம்:தாராபுரம் திருமலைப்பாளையத்தில், விருதுநகரை சேர்ந்த விக்னேஷ், 28 என்பவரை, 2021 ஆக., 17ல் கும்பல் வெட்டி கொலை செய்தது.இதுதொடர்பாக அலங்கியம் போலீசார், விசாரித்ததில் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மனோஜ், செல்வம், கருப்புசாமி, சுகன்ராஜ் என, 12 பேரை கைது செய்தனர்.கொலை வழக்கு விசாரணை தாராபுரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஜாமீனில் வெளிவந்த கருப்பசாமி, 24 உட்பட சிலர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். கோர்ட் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர்.இச்சூழலில், கோவையில் தலைமறைவாக இருந்த விருதுநகர், அல்லம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, 24 என்பவரை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
11-Feb-2025