மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகுறித்து கலெக்டர் ஆலோசனை
மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகுறித்து கலெக்டர் ஆலோசனைஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். அனைத்து துறைகளில் நடந்து வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில், 60 புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை விரைவுபடுத்த அறிவுறுத்தினர்.