வரி செலுத்த அவகாசம்கோரி வியாபாரிகள் மனு
வரி செலுத்த அவகாசம்கோரி வியாபாரிகள் மனுஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் அனைத்து வணிகர் சங்க தலைவர் கலையரசன் தலைமையிலான வியாபாரிகள், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரிய சேமூர் மண்டலத்துக்கு உட்பட்ட கடைகளில் தொழில் வரி, தொழில் உரிமம், குப்பை வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என கூறுகின்றனர்.வரி விதிப்பு அதிக தொகையாக இருப்பதால் உடனடியாக செலுத்த முடியவில்லை. வணிகர்களின் நலன் கருதி, வரியினங்களை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.