மேலும் செய்திகள்
மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு
27-Feb-2025
மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு ஈரோடு:ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, துணை கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.ஈரோடு மாநகராட்சியில் சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் வகையில், தீவிர துாய்மை பணிகள்,விழிப்புணர்வு முகாம்கள் நடத்த நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது.ஈரோடு மாநகராட்சி முதலாம் மண்டலத்தில், சுகாதார அலுவலர் தங்கராசு அறிவுறுத்தலின்படி, துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில், துாய்மை பணி நேற்று நடந்தது. 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.சிறப்பாக துாய்மை பணிகளை மேற்கொண்ட, மூவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு துணை கமிஷனர் தனலட்சுமி சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.
27-Feb-2025