இணை பேராசிரியர் வீட்டில் கைவரிசை
இணை பேராசிரியர் வீட்டில் கைவரிசைகோபி:கோபி அருகே பசுமை நகரை சேர்ந்தவர் யூனாஸ், 59; நம்பியூர் அரசு கலைக்கல்லுாரி இணை பேராசிரியர்; நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் வளையல், மூன்று வெள்ளி டம்ளர் மற்றும் ஒரு மொபைல்போன் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.