உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பல்சர் மீது மோதிய லாரிகட்டட தொழிலாளி பலி

பல்சர் மீது மோதிய லாரிகட்டட தொழிலாளி பலி

பல்சர் மீது மோதிய லாரிகட்டட தொழிலாளி பலிபவானி:தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜ்குமார், 32; கட்டட தொழிலாளி. திருமணமாகி குழந்தை உள்ளது. இவரின் நண்பர் மணிகண்டன், 34; இருவரும் கட்டட வேலைக்கு, பல்சர் பைக்கில் கோவைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், நசியனுார் அரிசி மண்டி பைபாஸ் அருகே வந்தபோது, இன்டிகேட்டர் போடாமல் இடதுபக்கம் பைக் திரும்பியுள்ளது.இதனால் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் சுரேஷ் ராஜ்குமார் சம்பவ இடத்தில் பலியானார். மணிகண்டன் லேசான காயத்துடன் தப்பினார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !