உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள்ளை ஆதரிக்கும் கட்சிகள் கள்இறக்குவோருக்கு பாதுகாப்பாக இருங்க

கள்ளை ஆதரிக்கும் கட்சிகள் கள்இறக்குவோருக்கு பாதுகாப்பாக இருங்க

'கள்ளை ஆதரிக்கும் கட்சிகள் கள்இறக்குவோருக்கு பாதுகாப்பாக இருங்கள்'ஈரோடு:''கள்ளை ஆதரிக்கும் கட்சிகள், கள் இறக்குவோருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.ஈரோட்டில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெரும்பாலான கட்சிகள், கள்ளுக்கான தடையை நீக்கி கள்ளை இறக்க அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். அதுபோன்ற கட்சியினர், கள் இறக்குவோருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமீபமாக கள் இறக்குவோர் போலீசால் துன்புறுத்தப்படுகின்றனர். கள் இறக்குவோருக்கு ஆதரவாக கட்சிகள் முன்வர வேண்டும்.கள் போதை பொருள். உணவு பொருள் அல்ல எனக்கூறும் கட்சிகள் இருந்தால், எங்களுடன் வாதிட வரலாம். எந்த நிலைப்பாடும் இல்லாத கட்சிகளும், அதன் தலைவர்களும் விவசாயிகளுக்கு விரோதமானவர்கள். 'ஜெய் ஜவான்; ஜெய் கிசான்' என்கின்றனர். ராணுவ வீரர்கள் இறந்தால் சில லட்சம் முதல், சில கோடி ரூபாய் வரை நிவாரணம் தருகின்றனர். விவசாய பணியில் விவசாயி இறந்தால், 2 லட்சம் ரூபாய் மட்டுமே தருகின்றனர்.மேட்டூர் அணையில் நீர் இருப்பு முழுமையாக இருந்தும், பச்சை நிறமாக காணப்படுகிறது. பெங்களுரு மாநகரின் கழிவும், ஆலைகளின் கழிவும் கலந்து சேமிக்கும் இடமாக மாறுகிறது. இதற்கு மாற்றாக காவிரி நீரை தினசரி பங்கீடு முறையில் வழங்க வேண்டும். தேசிய அளவில், 70 சதவீதம் சமையல் எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம். தற்போது தென்னையை ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குவதாலும், கடும் வறட்சியாலும் தேங்காய் உற்பத்தி, கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.இதை சீராக்க அரசும், வேளாண் துறை, தோட்டக்கலை துறை முன்வராவிட்டால், சமையல் எண்ணெய் இறக்குமதி, 80 முதல், 90 சதவீதமாகும். ரேஷனில் பாமாயிலுக்கு பதில், தேங்காய் எண்ணெய் உட்பட இங்கு விளையும் விளை பொருட்கள் மூலம் கிடைக்கும் எண்ணெயை, அரசு மானியத்தில் கொள்முதல் செய்து ரேஷனில் வழங்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற எண்ணெய் இறக்குமதியை தவிர்க்கலாம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ