உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்பு

சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்பு

சமையலறையில் மனைவி சடலம்படுக்கை அறையில் கணவன் மீட்புஈரோடு:ஈரோடு, பெரியசேமூர், இ.பி.பி.நகரை சேர்ந்தவர் இளங்கோவன். சுமை தொழிலாளியான இவரின் மனைவி புனிதா, 30; நேற்று காலை, 11:00 மணியளவில் வீட்டில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். சமையலறையில் புனிதா இறந்து கிடந்தார். வீட்டுக்குள் புகைமூட்டமாக இருந்தது. சோபா முற்றிலுமாக எரிந்திருந்தது. படுக்கை அறையில் இருந்த இளங்கோவனை மீட்டு வெளியே அழைத்து வந்துள்ளனர். இறந்த புனிதா உடலில் தீக்காயம் இல்லை. வீட்டுக்குள் சூழ்ந்த புகையால் மூச்சு விட முடியாமல் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ