உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதலீட்டை முழுங்கிய விஜயமங்கலம் தம்பதி மீது புகார்

முதலீட்டை முழுங்கிய விஜயமங்கலம் தம்பதி மீது புகார்

முதலீட்டை 'முழுங்கிய' விஜயமங்கலம் தம்பதி மீது புகார்ஈரோடு:பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம், பச்சாகவுண்டன் பாளையம் குறவன்காட்டை சேர்ந்தவர் துரைசாமி, 70; இவர் தலைமையிலான மக்கள், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரில் குடியிருக்கும் கனகரத்தினம்-கிருஷ்ணவேணி தம்பதி, 2015ல் ஸ்ரீகிருஷ்ணா பைனான்ஸ் நிறுவனத்தை, கைக்கோளன்பாளையத்தில் துவங்கி நடத்தினர்.முதலீட்டுக்கு அதிக வட்டி, கூடுதல் வட்டி தருவதாக கூறினர். நான் நான்கு லட்ச ரூபாயை முதலீடு செய்தேன். என்னைப்போல் பலரும் டெபாசிட் செய்தனர். டெபாசிட் தொகை முதிர்வடைந்து வட்டியுடன் பணத்தை கேட்டபோது பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தினர். மற்றவர்களுக்கும் பணம் தரவில்லை. பலமுறை கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர். தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் மோசடி தொடர்பாக எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ