உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி நீர் மாசுபடுவதை தடுக்க கோரிவரும் 24ல் உண்ணாவிரதம் அறிவிப்பு

பவானி நீர் மாசுபடுவதை தடுக்க கோரிவரும் 24ல் உண்ணாவிரதம் அறிவிப்பு

பவானி நீர் மாசுபடுவதை தடுக்க கோரிவரும் 24ல் உண்ணாவிரதம் அறிவிப்புசத்தியமங்கலம்:ஆலை கழிவுகளால் பவானி நதி நீர் மாசடைவதாக, மக்கள் மத்தியில் சமீப காலமாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் நிறம் மாறுவது, துர்நாற்றம் வீசுவது குறைந்த நிலையில், சில மாதங்களாக பவானி நதிநீர் மீண்டும் நிறம் மாறி, துர்நாற்றம் வீசுகிறது. சிறுமுகை பகுதியில் பவானி நதிநீர் குடிக்க தகுதியற்றது எனவும், யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ன சுகாதார துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில், சத்தியமங்கலத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார். சட்டசபையில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை வரும், ௨௪ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பவானிசாகரில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பவானி நீரேற்று பாசன விவசாயிகள் சங்கம், சிறுமுகை பவானி நதி நீர் பாதுகாப்பு சங்கம், மக்கள் நல கூட்டமைப்பு, பல்சமய இயக்கம், காங்.,- இ.கம்யூ., - வி.சி., - புரட்சிகர இளைஞர் முன்னணி, பா.ம.க.,- தே.மு.தி.க., தமிழ் புலிகள் கட்சி, அ.ம.மு.க., கட்சி நிர்வாகிகள், பல்வேறு பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை