உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இருப்பில் தேவையான வேளாண் இடுபொருள்

இருப்பில் தேவையான வேளாண் இடுபொருள்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீ., ஆகும். நடப்பாண்டில் இதுவரை, 385.33 மி.மீ., மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை, 96.85 அடியாக உள்ளது. வேளாண் விரிவாக்க மையங்களில் வினி-யோகம் செய்வதற்காக நெல் விதை, 309 டன், சிறு தானியங்கள், 103 டன், பயறு வகைகள், 96 டன், எண்ணெய் வித்துக்கள், 278 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ரசாயன உரங்களான யூரியா, 6,290 டன், டி.ஏ.பி.,-1,342 டன், பொட்டாஷ்-2,511 டன், காம்ப்ளக்ஸ், 14,511 டன் இருப்பில் உள்ளது. நடப்பு வேளாண் பருவத்துக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தவிர விவசாயிக-ளுக்கு தேவையான பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் போது-மான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.நேற்றைய கூட்டத்தில், 120 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை