உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்-குழுவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இது, அரசு பணியல்ல. குழந்தைகள் உளவியல், மனநல மருத்துவம், சட்டம் மற்றும் சமூ-கப்பணி, சமூகவியல் அல்லது மனித உடல் நலம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி என ஏதாவது பட்டம் பெற்று, 7 ஆண்டுகள் ஈடுபாடு காட்டியோர் விண்ணப்பிக்கலாம். 35 முதல், 65 வயதுக்கு உட்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலக புதிய கட்டடத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது அதற்கான இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து வரும் மார்ச், 7 க்குள், 'இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை