உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு அரசு மருத்துவமனையில் படுக்கைகளுக்கு கட்டணம் நிர்ணயம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் படுக்கைகளுக்கு கட்டணம் நிர்ணயம்

ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில், நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டண படுக்கை கொண்ட அறைகள் பயன்பாட்டில் உள்ளது. மக்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற, 20 படுக்கை கொண்ட கட்டண சிகிச்சை பிரிவு பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டண பிரிவு பயன்பாட்டில் உள்ளது.தனி அறை (டீலக்ஸ்) ரூ.2,000. இரு படுக்கை அறை (டபுள் டீலக்ஸ் அறை) ரூ.1,000. மூன்று படுக்கை அறை (டிரிபிள் டீலக்ஸ் அறை) ரூ.700. மருந்து, மாத்திரை, மருத்துவ பரிசோதனை, உணவுக்கு தனி கட்டணம். மேலும் விபரங்களுக்கு குருபிரசாத் 9150318361. வஞ்சி வேந்தன் 938580845. என்ற எண்களில் அழைக்கலாம். அரசு பணியாளர், அரசு ஓய்வூதியம் பெறுவோர், புதிய உடல் நல காப்பீடு திட்ட அட்டை வைத்திருந்தால் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ