உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழகத்தில் வருவாய் ஈட்டி பிற மாநிலங்களில் செலவழிக்கும் நிறுவனங்கள் அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் வருவாய் ஈட்டி பிற மாநிலங்களில் செலவழிக்கும் நிறுவனங்கள் அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா குற்றச்சாட்டு

ஓசூர்: ''மத்திய அரசின் சில நிறுவனங்கள், தமிழகத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு சென்று, பல மாநிலங்களுக்கு கொடுப்பதை வேலையாக வைத்துள்ளது,'' என, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழ்நாடு தொழில் முத-லீட்டு கழகம் (டிக்) சார்பில், தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. டிக் நிர்வாக இயக்குனர் சாய்குமார், தொழில் துறை செயலாளர் அருண்ராய், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தனர்.தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஓசூர், சேலம், கோவை, தர்ம-புரி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 65 தொழில்-முனைவோர்களுக்கு, 179.64 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுத-விகளை வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா பேசி-யதாவது:ஒற்றை சாரள முறையில், புதிய தொழில் துவங்க செய்ய வேண்-டிய அனைத்து செயல்முறைகளுக்கும் அனுமதி வழங்குகிறோம். நாட்டில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், ஒரு சில பகுதிகளை தாண்டி வளர்ச்சி இருக்காது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உள்ளது.இந்திய அளவில் உற்பத்தியாகும் ஆட்டோமொபைல் பொருட்-களில், 40 சதவீதம் தமிழகத்தில் தயாராகிறது. தமிழர்களின் தனித்-துவமிக்க உழைப்பால் தான், தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. இந்திய அளவில் தயாராகி விற்பனை செய்யப்படும், நான்கு சக்கர மின்சார வாகனங்களில், 40 சதவீதமும், இருசக்கர வாகனங்களில், 70 சதவீதம் தமிழகத்தில் தயாராகிறது. உள்ளூர் மக்களுக்கு, வேலைவாய்ப்பு உறுதி செய்ய தான் நாங்கள் செயல்-பட்டு வருகிறோம்.மத்திய அரசின் சில நிறுவனங்கள், தமிழகத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு சென்று, பல மாநிலங்களுக்கு கொடுப்பதை வேலையாக வைத்துள்ளன. அதை தமிழகத்தின் வளர்ச்சிக்கு தான் செலவிட வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம். இப்-பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களின், சமூக பொறுப்புணர்வு நிதியை, இப்பகுதி மக்களுக்கே செலவிட வேண்டும் என, சம்பந்-தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிக்கப்படும். ஓசூரில், பன்-னாட்டு விமான நிலையத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயிலையும் இணைத்தால், பெங்களூரு மற்றும் ஓசூர் இரட்டை நகரங்கள் போல் வளர்வதற்கான வாய்ப்-புகள் உள்ளன. ஓசூருக்கு சிறிய டைட்டல் பார்க் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக விழாவுக்குகிருஷ்ணகிரி எம்.பி., கோபிநாத், எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), ராமச்சந்-திரன் (தளி) முன்னிலை வகித்தனர்.பின்னர் சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலை-களின் பிரச்னைக்கு தீர்வு காண, 'சிப்காட் தொழில் நண்பன்' சந்-திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா, ஓசூர் அருகே, அமுதகொண்டப்பள்ளியில் ரோஜா செடிகள் சாகுபடி செய்யப்படும் டான்புளோரா பார்க் மற்றும் கெலவரப்-பள்ளி அணையிலிருந்து நீரை எடுத்து, அதை சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கு வழங்க நடந்து வரும் பணிகள், சிப்காட் தொழில் பூங்கா, திறன் மேம்-பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ், ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ