உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிரெடாய் சார்பில் வீட்டுமனை கண்காட்சி

கிரெடாய் சார்பில் வீட்டுமனை கண்காட்சி

'கிரெடாய்' சார்பில் வீட்டுமனை கண்காட்சிஈரோடு, ஆக. ௨௫-இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பு (கிரெடாய்) சார்பில், நாடு முழுவதும் வீட்டுமனை, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்காக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திண்டல் டர்மரிக் ஓட்டலில் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக 'கிரெடாய்' மாநில தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தேசிய துணைத்தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், மாநில செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, கண்காட்சியை திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன், மேயர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த விழாவில் 'கிரெடாய்' அமைப்பு சார்பில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளையின் பணிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு 'கிரெடாய்' மாநில பொருளாளர் சதாசிவம், ஈரோடு தலைவர் ஈஸ்வரன், செயலாளர் மாணிக்கம், ராஜன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சி இன்று மாலை நிறைவடைகிறது. நிறைவு விழாரில் பார்வையாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. சின்னத்திரை நடிகை சுஜிதா, பார்வையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ