உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை விற்பனையில் ஒருவர் கைது

குழந்தை விற்பனையில் ஒருவர் கைது

குழந்தை விற்பனையில் ஒருவர் கைதுஈரோடு, நவ. 8-ஈரோடு, கனிராவுத்தர் குளம் அருகே வசிப்பவர் நித்யா, 28; ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில், சந்தோஷ்குமார், 28, என்பவருடன் குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு, 40 நாட்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையை, ௪.௫௦ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இது தொடர்பாக நித்யா அளித்தபுகாரின்படி ஏற்கனவே ஒன்பது பேரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக, கன்னியாக்குமரி, காஞ்சர்கோடு ஜெப கிருபாகரன், 48, என்பவரை நேற்று கைது செய்தனர். குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியின் உறவினரான இவர், அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதனால் பெண் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதானோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி