குடிகார தந்தையால்மகள் தற்கொலை
குடிகார தந்தையால்மகள் தற்கொலைஈரோடு, :நாமக்கல் மாவட்டம் வெப்படையை சேர்ந்த சேகர்-கோகிலா மகள் தாரணி ஸ்ரீ, 15; அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். கூலி தொழிலாளியான தந்தை சேகருக்கு, மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி போதையில் தகராறு செய்துள்ளார். இதை மகள் தாரணிஸ்ரீ எச்சரித்தும் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, காலிங்கராயன் அணைக்கட்டு பகுதி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பி.பெ.அக்ரஹாரம் பகுதிக்கு அடித்து வரப்பட்ட உடலை, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று மதியம் மீட்டனர். பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்து, பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.