உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்

காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்

காலிங்கராயன் பாசனத்தில் உழவுப்பணி தீவிரம்ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில், இறுதிக்கட்ட உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.காலிங்கராயன் பாசனத்துக்கு ஜன.,௧ம் தேதி முதல் நீர் வினியோகிக்கப்படுகிறது. இப்பாசனத்துக்கு உட்பட்டு பண பயிர்களான கரும்பு, வாழை, மஞ்சள் மட்டுமின்றி நெல்லும் குறிப்பிட்ட பகுதியில் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன்பாளையம், வைரபாளையம், பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம் பகுதியில் இரண்டாம் பருவ சாகுபடிக்கான நாற்று நடவு பணி நடந்து வருகிறது. சில இடங்களில் இறுதிக்கட்ட உழவுப்பணி தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இப்பாசன பகுதிகளில் இறுதிக்கட்ட உழவுப்பணி நடக்கிறது. பெரும்பாலும் நாற்று நடவு நிறைவு பெற்றுள்ளது. தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைக்காததால், உழவுப்பணி தாமதமானது. இதனால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். குறுகிய காலத்தில் பயன் தரும் நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !