உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தவறி விழுந்து கண்டக்டர் சாவு

தவறி விழுந்து கண்டக்டர் சாவு

தவறி விழுந்து கண்டக்டர் சாவுபவானி:பவானி அருகே, ஒலகடம் அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி, 41; ஈரோடு அரசு போக்குவரத்து பணிமனையில், தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், ஈரோடு-பவானி வழித்தடத்தில் சென்று வரும், 5-ம் நம்பர் டவுன் பஸ்ஸில் டியூட்டியில் இருந்தார். காலிங்கராயன்பாளையம் வளைவில் திரும்பியபோது, படியில் நின்று கொண்டிருந்த கார்த்தி தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ