சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பவானி:வெள்ளித்திருப்பூர் அருகே குள்ளவீராம்பாளையத்தை சேர்ந் விவசாயி தங்கராசு, 50; இவரது கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை படுத்திருந்ததை பார்த்துள்ளார். தகவல் பரவியதால் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இந்நிலையில் அந்தியூர் வனத்துறையினர், குள்ளவீராம்பாளையத்தில் உள்ள தங்கராசு கரும்பு தோட்டத்துக்கு நேற்று வந்தனர். சிறுத்தை கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் இரு இடங்களில் கேமரா பொருத்தினர். கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானால், கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.