உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலி

பாம்பு கடித்து தொழிலாளி பலிஅந்தியூர்:அத்தாணி, ஓடைமேடு, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தங்கராசு, 60; கூலி தொழிலாளி. கருப்பணகவுண்டன் புதுாரை சேர்ந்த செல்வராஜுடன் நேற்று வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காலை கடன் முடிப்பதற்காக புதர் பகுதியில் சென்றபோது பாம்பு கடித்துள்ளது. அச்சத்தில் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை