உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்

கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்

கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சேதம்கோபி:கோபி நகராட்சி, 15வது வார்டு அனுமந்தராயன் கோவில் வீதியில் தெப்பக்குளம் உள்ளது. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் குண்டம் விழா சமயத்தில், இந்த தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். அதற்கு பின் தெப்பக்குளத்தின் பிரதான கதவு மூடியே இருக்கும். தற்போது தெப்பக்குளத்தில், 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதேசமயம் தெப்பக்குளத்தில் குப்பை விழுந்தும், பாசிபடர்ந்த நிலையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தவிர வடக்கு திசையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. தெப்பக்குள கட்டமைப்பை சுற்றி, குப்பை நிறைந்து காணப்படுகிறது. கோபி நகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை