கரும்புகளை சேதப்படுத்திய யானையால் பீதி
கரும்புகளை சேதப்படுத்திய யானையால் பீதிசத்தியமங்கலம்:தாளவாடி அருகே, கரும்பு பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.தாளவாடி அருகே கும்டாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான, 10 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, இரும்பு கேட்டை உடைத்து கரும்பு காட்டில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும், வனவிலங்குகள் விளைநிலத்தில் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகள் பீதியில் உள்ளனர்.