உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஈரோடு பஸ் ஸ்டாண்டில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, 35க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு, பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் தள்ளுவண்டி கடைகளை முறையான அனுமதியின்றி வைத்துள்ளனர். பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருக்கும் இடங்களை சிலர் ஆக்கிரமித்து, கடை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதில் கூட இடையூறுகளை சந்தித்தனர். இது குறித்து நமது நாளிதழில் கடந்த, 17ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.இதன்படி நேற்று காலை, மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பில் இருந்த தள்ளுவண்டி கடைகள், மேஜைகள், ரேக்குகளை அள்ளி குப்பை லாரியில் ஏற்றினர். 35க்கும் மேற்பட்ட தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை