உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் முல்லை பூ ஒரு கிலோ, 1,060 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-540, காக்கடா-450, செண்டுமல்லி- 50, கோழிகொண்டை57, ஜாதி முல்லை-750, கனகாம்பரம்-510, சம்பங்கி-80, அரளி-90, துளசி-40, செவ்வந்தி-180 ரூபாய்க்கும் விற்பனையானது.* அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடந்த ஏலத்தில், கதளி கிலோ 40 ரூபாய், நேந்திரன், 50 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூவன் தார்-480 ரூபாய், செவ்வாழை தார்- 520, ரஸ்தாளி-600, தேன்வாழை-450, மொந்தன்-200, ஜி-9 ரகம்-420 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 3,230 வாழைத்தார், 5.40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தக்கு, 993 பி.டி., ரக பருத்தி மூட்டை வரத்தானது. கிலோ, 77 ரூபாய் முதல், 89 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 298 குவிண்டால் பருத்தி, 21.௩2 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,657 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 17.91 - 29 ரூபாய்; நெல், 12 மூட்டை வரத்தானது. தேங்காய் பருப்பு, 18 மூட்டை வரத்தாகி, கிலோ, 143.90 - 18.89 ரூபாய்; நிலக்கடலை, 187 மூட்டைகள் வரத்தாகி கிலோ, 65.65 - 70.61 ரூபாய்க்கு விற்றது.* தாளவாடிஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மொத்தம், 143 மூட்டை வரப் பெற்றது. குவிண்டால் அதிகபட்சம், 13,366 ரூபாய், குறைந்தபட்சம், 11,369 ரூபாய்க்கும் ஏலம் போனது. 85.67 குவிண்டால் மஞ்சள், 10.15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. பல்வேறு பகுதி விவசாயிகள், 30 ஆயிரம் கிலோ எடை தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். முதல் தர பருப்பு அதிகபட்சம் கிலோ, 183.45 ரூபாய், இரண்டாம் தரம், 86.89 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 46.௪௯ லட்சம் ரூபாய்க்கு விற்றது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை