அரசு கலை அறிவியல்கல்லுாரியில் முப்பெரும் விழா
அரசு கலை அறிவியல்கல்லுாரியில் முப்பெரும் விழாநம்பியூர்:-நம்பியூர்,- திட்டமலை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.கணிதவியல் துறை தலைவர் தமிழ்மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சூரியகாந்தி ஆண்டு அறிக்கை வாசித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் வரதராஜன் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் யூனஸ், சிறப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மொடக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் எபிநேசர், மாணவ மாணவியருக்கு கல்வியில் முன்னேற்றத்திற்கான வழிமுறையை எடுத்துரைத்தார். கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உடற்பயிற்சி துறையின் தலைவர் பாலமுருகன், விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவிபேராசிரியர் கருப்புசாமி முத்தமிழின் சிறப்புகளை விளக்கினார்.