தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறை
தொழிலாளியிடம் பணம்பறித்த ௪ பேருக்கு சிறைசத்தியமங்கலம்:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் பக்ருதீன், 39; சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட் பகுதியில் ஒரு மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்கிறார். கடந்த மார்ச் மாதம், 29ம் தேதி இரவு சொந்த ஊருக்கு செல்ல, சத்தி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அங்கிருந்த கழிவறைக்கு சென்றபோது நான்கு பேர் அவரை மிரட்டி, 20,000 ரூபாயை பறித்து சென்றனர். அவர் புகாரின்படி விசாரித்த சத்தி போலீசார், சத்தியமங்கலம் சின்ன பள்ளி வாசல் சாதிக், 21, பிரபு,25, வடக்குபேட்டை ஸ்ரீநாத், 22, கரட்டூர் மணிகண்டன், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மூன்று டூவீலர், பணத்தை பறிமுதல் செய்தனர்.