உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரியகாளியம்மன் கோவிலில்தீ மிதித்து பக்தர்கள் வழிபாடு

கரியகாளியம்மன் கோவிலில்தீ மிதித்து பக்தர்கள் வழிபாடு

கரியகாளியம்மன் கோவிலில்தீ மிதித்து பக்தர்கள் வழிபாடுகோபி கோபி அருகே கலிங்கியம் கரியகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த மார்ச், 27ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 8ல் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை, அம்பாள் பரிவாரங்களுடன் திருவீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை அம்மை அழைத்தல் நடந்தது. அதையடுத்து அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி நீள குண்டத்தில் காலை, 5:30 மணிக்கு தலைமை பூசாரி பிரதீப் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்தனர். கலிங்கியம், அவ்வையார்பாளையம், புதுவள்ளியாம்பாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி