உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு

தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவு

தீ விபத்தில் சிக்கியபள்ளி மாணவன் சாவுபவானி:அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம். இவரின் மூத்த மகன் கோகுலகண்ணன், 10; அரசுப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன். கடந்த, 6ம் தேதி இரவு மழை பெய்தபோது மின்சாரம் தடைபட்டது. அப்போது வீட்டில் துாங்கி கொண்டிருந்த கோகுலகண்ணன் மீது, மண்ணெண்ணெய் விளக்கு தவறி விழுந்து விட்டது. துணிகளில் தீப்பற்றி எரிந்ததால், பெற்றோர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர். இந்நிலையில் மாணவன் நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து அம்மபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ