மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
19-Mar-2025
தொடர் வெயிலால் காட்டன்ஜவுளி விற்பனை அதிகரிப்புஈரோடு:ஈரோட்டில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை, பல்வேறு இடங்களில் வாரச்சந்தை ஜவுளி விற்பனை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கடந்த வாரம் வரை கோவில் விழாக்கள், திருவிழா, முகூர்த்த சீசன் இருந்ததால் பரவலாக ஜவுளி விற்பனை நடந்தது. தற்போது திருவிழா சீசன் இல்லை. கடும் வெயில் வாட்டுவதால் நேற்றைய சந்தையில் காட்டன் ஜவுளிகளான காட்டன், காட்டன் மிக்ஸ் ரகத்தில் ஆண், பெண்களுக்கான சட்டை, பேன்ட், லுங்கி, நைட்டி, டி-ஷர்ட், பனியன், ஜட்டி, இரவு ஆடைகள், துண்டு, வேட்டி, லுங்கி, டிரவுசர் உள்ளிட்டவை சில்லறையாக விற்பனையானது. பண்டிகை சீசன் இல்லாததால் மொத்த விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.
19-Mar-2025