உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் பரவலாக கனமழை; கோபியில் 155 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் பரவலாக கனமழை; கோபியில் 155 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் பரவலாக கனமழை; கோபியில் 155 மி.மீ., பதிவுஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. கோபியில் அதிகபட்சமாக, ௧௫௫ மி.மீ., மழை பெய்தது.ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பகலில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று காலையுடன் நிறைவடைந்த, 24 மணி நேரத்தில் கோபியில் அதிகபட்சமாக, 155.20 மி.மீ., மழை பெய்துள்ளது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-12.30, மொடக்குறிச்சி-3, பெருந்துறை-2, சென்னிமலை-39, பவானி-19, கவுந்தப்பாடி-91.40, அம்மாபேட்டை-50.60, வரட்டுபள்ளம்-51.20, எலந்தகுட்டைமேடு-100.40, கொடிவேரி அணை-52.20, குண்டேரிபள்ளம் அணை-29.40, நம்பியூர்-79, சத்தி-23, பவானிசாகர் அணை-39.40, தாளவாடி-15.ஓடத்துறை குளம் நிரம்பியதுகோபி அருகே பவானி தாலுகாவுக்கு உட்பட்ட ஓடத்துறை குளம், 400 ஏக்கர் பரப்பிலானது. இந்தக்குளம், 20 கிராமங்களை சேர்ந்த, இரண்டு லட்சம் மக்களுக்கு குடிநீராதாரமாக உள்ளது. குளத்தின் நீர்மட்டம் நேற்று முன்தினம் மாலை, 28 அடியாக இருந்தது. இந்நிலையில் கொளப்பலுார், கெட்டிச்செவியூர், நாகதேவம்பாளையம், குரவம்பாளையம் உள்ளிட்ட பகுதியில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் குளத்தின் நீர்மட்டம் ஒரே இரவில் இரண்டடி உயர்ந்து நேற்று அதிகாலை நிரம்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ