உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

சத்தியமங்கலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்-னணி நிர்வாகிகளுடன், சத்தி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சத்தியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாசு கட்டுப்-பாட்டு வாரிய விதிகளின்படி, களிமண்ணாலான சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். சிலை-களை மற்ற மத ஸ்தலங்கள், கல்வி நிறுவனங்க-ளுக்கு அருகில் வைக்க கூடாது.பூஜையின் போது காலை, மாலை இரண்டு மணி நேரம் மட்டுமே பெட்டி வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். பிற மதத்தினரின் உணர்-வுகளை பாதிக்கும் வகையில் முழக்கம் எழுப்ப கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினர்.கூட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ