உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு வழியே சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோடு வழியே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம்: ஈரோடு வழியே, எர்ணாகுளம்-பெங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.எர்ணாகுளம்-யலஹங்கா (பெங்களூரு) சிறப்பு ரயில் செப்., 4, 6 தேதிகளில் மதியம், 12:40 மணிக்கு கிளம்பி, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியே அன்று இரவு, 11:00 மணிக்கு யலஹங்கா சென்ற-டையும். ஈரோடுக்கு மாலை, 5:45 மணிக்கும், சேலம் ஜங்ஷனுக்கு, 6:33 மணிக்கு வருகிறது.யலஹங்கா-எர்ணாகுளம் சிறப்பு ரயில், செப்., 5, 7 தேதிகளில் அதிகாலை, 5:00 மணிக்கு கிளம்பி, கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே அன்று மதியம், 2:20 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு காலை, 8:58 மணிக்கும், ஈரோடுக்கு, 9:50 மணிக்கும் வருகிறது.இந்த ரயிலில் ஏசி சேர் கார் பெட்டிகள், மூன்ற-டுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறி-வித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ