ஈரோடு கேர் 24 மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்கு அதிநவீன கருவி
ஈரோடு: ஈரோட்டில் முதல் முறையாக, கேர் 24 மருத்துவமனையில், ஆஞ்சியோ சிகிச்சைக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன ஓசிடீ அல்ட்ரியான் கருவி தொடக்க விழா நடந்தது. மருத்துவமனை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய வித்யா பவன் பள்ளி தலைவர் ராமகிருஷ்ணன், கருவியின் சேவையை குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேர் 24 மருத்துவமனை டாக்டர் விஜய், டாக்டர் பாலசுப்ரமணி மற்றும் இதர மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.அதிநவீன சிகிச்சை கருவி குறித்து டாக்டர் விஜய் கூறியதாவது: ஓசிடீ 2.௦ கருவியானது ஆஞ்சியோ சிகிச்சை முறையை வேகமாக, துல்லியமாக, பாதுகாப்பாக செய்ய பெரிதும் உதவும். இதன்மூலம் துல்லியமாக அடைப்புகளை கண்டறிந்து, அடைப்பு எதனால் உருவானது, அடைப்பின் அளவை கணித்து, விரைவான சிகிச்சை முடிவுகளை எடுக்க முடியும் என்றார். டாக்டர் பாலசுப்பிரமணி பேசுகையில், இந்த அதி நவீன ஓசிடீ 2.0 கருவியானது, இருதயத்துக்கு மட்டும் அல்லாது மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் உள்ள அடைப்புகளை கண்டறிந்தும் விரைவாக சிகிச்சை அளிக்க உதவும் என்றார்.