வட்டார போக்குவரத்து ஆபீசில் வாகன உரிமையாளர்கள் தர்ணா
கோபி: கோபி-சத்தி சாலையில், கரட்டூர் அருகே சென்ற மாருதி எக்கோ என்ற காரை, சுற்றுலா வாகன உரிமையாளர் சிலர் நேற்று மதியம் மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில், சொந்த உபயோகத்துக்கு வாங்கிய காரை, வாடகைக்கு பயன்ப-டுத்தியிருப்பது தெரியவந்தது. இதனால் காரை சிறைபிடித்து, கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். சொந்த உபயோக வாகனத்தை, வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக, கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு கொடுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகா-ரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், கலைந்து சென்றனர்.