பள்ளி மாணவன் மாயம்
பள்ளி மாணவன் மாயம்பவானி, ஆக. 25-சித்தோடு அருகேயுள்ள நசியனுார், வசந்தம் ராயல் கார்டனை சேர்ந்தவர் நந்தகுமார், 40; இவரின், 13 வயது மகன், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த, 22ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவன், மாலை, 6:௦௦ மணிக்கு பிறகு காணவில்லை. நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவனின் தாய் புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.