உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா

பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா

பவானி அரசுப்பள்ளியில் ஆண்டுவிழாபவானி:பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 125வது ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சேகர் தலைமை வகித்தார்.உதவி தலைமையாசிரியர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். நகர்மன்ற தலைவர் சிந்துாரி இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.விளையாட்டு விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன், பவானி இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர், பரிசு வழங்கி பாராட்டினர். முன்னாள் போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னாள் மாணவர்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர். உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ