மண்டல அலுவலகத்தில்மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
மண்டல அலுவலகத்தில்மாநகராட்சி கமிஷனர் ஆய்வு ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி மண்டல அலுவலகத்தில், கமிஷனர் ஸ்ரீகாந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்களின் வருகை பதிவேடு, பொதுமக்களின் கோரிக்கை விண்ணப்பங்கள், வரவு செலவு கோப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் அளிக்கும் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வரியினங்களை வசூலிப்பதில், மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.