அனுமதியின்றி பைப்லைன்அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
அனுமதியின்றி பைப்லைன்அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுஈரோடு:சத்தியமங்கலம் யூனியன், கோணமூலை பஞ்., பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: கோணமூலை பஞ்., அக்கறை நெககம் கிராமத்தை சேர்ந்தவர், பவானி நதியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் உள்ள தங்கள் இடத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல பைப்லைன் அமைக்கிறார். அவ்விடத்தில் ஏற்கனவே பைப்லைன் இருந்ததாகவும், பைப்லைனை மாற்றி அமைக்க அனுமதி பெற்று செய்வதாக கூறுகிறார். ஆனால், முறையான அனுமதி பெறவில்லை. மக்கள், விவசாயிகள் நிர்பந்தம் செய்ததால், இப்பகுதி வி.ஏ.ஓ., கருணாகரன், போலீஸில் புகார் செய்தார். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதுபற்றி ஆர்.ஐ., - தாசில்தாரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அனுமதி பெறாத நிலையில் மீண்டும் அதிகாரிகள் ஆதரவுடன் பணியை தொடங்கியுள்ளார். இதுபற்றி விசாரித்து, பைப்லைன் அமைப்பதை நிறுத்தி, உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.