மேலும் செய்திகள்
பஞ்., செயலர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
11-Mar-2025
இன்று வருமுன்காப்போம் திட்ட முகாம்ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டல் காரப்பாறை பகுதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 'வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்' இன்று நடக்கிறது. முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காசநோய், தொழுநோய், மனநலம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க உள்ளனர். மக்கள் பங்கேற்று பிற நோய்களுக்கும் பரிந்துரை பெறலாம். இத்தகவலை மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.ஒரிச்சேரி புதுார் பஞ்., செயலரை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகைபவானி:பவானி அருகே ஒரிச்சேரி புதுார் பஞ்., ஒன்பதாவது வார்டு பகுதியில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த, 15 நாட்களாக குடிதண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பஞ்., செயலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த பெண்கள், 15க்கும் மேற்பட்டோர் பஞ்., அலுவலகத்துக்கு நேற்று காலி குடம், பக்கெட்டுடன் சென்றனர். அப்போது பஞ்., செயலர் பூங்கொடி, ஒரிச்சேரி புதுார் பஸ் ஸ்டாப்பில், வீட்டு வரி, தண்ணீர் வரிக்கான வசூலில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.இதையறிந்து அங்கு சென்ற பெண்கள், காலி குடம், பிளாஸ்டிக் பக்கெட்டுகளுடன் அவரை முற்றுகையிட்டனர். தண்ணீர் வந்து, 15 நாட்களாகிறது. ஆற்று தண்ணீர், போர்வெல் தண்ணீர் என தினமும் மாறி மாறி வந்த நிலையில், எந்த தண்ணீரும் வரவில்லை என்று கூறினர். நாளை (இன்று) தண்ணீர் வரும். அதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என செயலர் கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
11-Mar-2025