பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை
பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜைசத்தியமங்கலம்:பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று மாவிளக்கு பூஜை நடைபெற்றது.நேற்று முன்தினம் தீமிதி விழா நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். நேற்று மதியம் 200க்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்பரதம் திருவீதி உலா வந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நாளை மாலை தங்கரதம் புறப்பாடு, சனிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஏப்,14.,ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.